Loading the player...


INFO:
திருச்சி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது - மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளதாலதிருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவிப்பு ...தென்மேற்கு வங்க கடலில் தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு பருவ மழையை தீவிரமடைய செய்துள்ளது.இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை துவங்கி படிப்படியாக மற்ற மாவட்டங்களில் மழை இருக்கும் என்றும் குறிப்பாக திருச்சி தஞ்சை திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் கன மழை இருக்கும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பின் வாயிலாக தெரிவித்திருந்தது.
Trichy Rain News Today,திருச்சி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது - it has been raining widely since early morning in trichy district - Samayam Tamil